Verse 1கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம்
ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்
வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே
உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே.
Verse 2உம் சமாதானம் தந்து அனுப்பும்
உம் நாளை முடிப்போமே உம்மோடும்
பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்
எப்பாவம் வெட்கம் அணுகாமலும்
Verse 3உம் சமாதானம் இந்த ராவிலும்;
இருளை நீக்கி ஒளி தந்திடும்
பகலோராவோ உமக்கொன்றாமே
எச்சேதமின்றி எம்மைக் காருமே.
Verse 4உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்
நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்
பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்
பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்.
Verse 1Karththave ippo ummaith thozhuthoam
Ormiththezhunthu geetham paaduvom
Veetaekumun um paatham panninthe
Um aaseervaatham pettruch selvomae.
Verse 2Um samaathaanam thanthu anuppum
Um naalai mudippomae ummodum
Paatham pannintha emmaik kaaththidum
Eppaavam vetkam anugaamalum
Verse 3Um samaathaanam intha raavilum;
Irullai neekki oli thanthidum
Pakaloraavo umakkonraamae
Echchaethamindri emmaik kaarumae.
Verse 4Um samaathaanam jeeva naal ellaam
Neer thollai thunbil pugal inbamaam
Boologath thollai oya azhaippeer
Paerinba vaazhvai anbaai eeguveer.
Download Song