கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன்
நீர் ஒருவர் பராபரனாமே
நான் உம்மையே நமஸ்கரிப்பேன்.
என் வேண்டுதல் உம்மண்டை ஏறவே;
நான் இயேசுவை முன்னிட்டுக் கூப்பிட
நீர் உமதாவியைத் தந்தருள.
Verse 2
நான் இயேசு நாமத்தில் மன்றாட
அவரண்டைக் கடியேனை இழும்;
நான் மண்ணை அல்ல விண்ணை நாட
தேவாவி என்னைப் போதிவிக்கவும்
நான் உமதன்பை ஆத்துமாத்திலே
ருசித்தும்மைத் துதிக்க கர்த்தரே.
Verse 3
இத்தயவை என் மேலே வையும்
அப்போ நான் பாடுங்கீதம் உத்தமம்
அப்போது இன்பமாய் இசையும்
அப்போதென் வாயின் சொற்கள் சத்தியம்
அப்போதென் ஆவி தேவரீருக்கே
துதியுண்டாகக் கீதம் பாடுமே.
Verse 4
அதேனெனில் சொற்கடங்காத
படியே என்னில் வேண்டிக் கொள்வாரே;
நான் அவரால் தள்ளாடிடாத
மெய் விசுவாசமாய்த் தொழுவேனே.
நற்சாட்சி அவரால் அடைகிறேன்
அத்தால் நான் பிள்ளைபோல் அப்பா என்பேன்.
Verse 5
நான் அவர் ஏவுதலினாலே
இவ்விதமாய் விண்ணப்பம் பண்ணவே
அப்போதவர் ஒத்தாசையாலே
நான் உமக்கேற்க வேண்டினதற்கே
என் பரம பிதாவாம் தேவரீர்
ஆம் செய்வோம் என்றுத்தாரஞ் சொல்லுவீர்.
Verse 6
நான் அவர் ஏவக்கேட்கும் யாவும்
தெய்வீக சித்தத்துக் கிசைந்தது;
நான் இயேசு நாமத்தில் பிதாவும்
பராபரனுமான உமக்கு
முன்பாய் பணிகிறதினாலே நீர்
என் வேண்டுதலை அன்பாய்க் கேட்கிறீர்.
Verse 7
நான் உம்முடைய பிள்ளை என்ற
நற்சாட்சி பெற்றதால் நான் பாக்கியன்;
ஆகையினால் நான் வேண்டும் என்ற
எல்லா நல்லீவையும் அடைபவன்
நான் கேட்கிறதிலும் அதிகம் நீர்
இரக்கமாய்த் தந்தருளுகிறீர்.
Verse 8
உம்மண்டை ஏசு எனக்காக
மன்றாடுகையினால் நான் பாக்கியன்;
மெய்யான தெய்வப் பக்தியாக
நான் பண்ணிய ஜெபத்தின் நற்பலன்
அத்தாலே நிச்சயமாமே எல்லாம்
அவருக்குள்ளும் அவராலுமாம்.