Verse 1கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.
Verse 2உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.
Verse 3பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.
Verse 4ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.
Verse 5சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.
Verse 6கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயாராய்
எம் நித்திய வீடாவீர்.
Verse 1Karththave yugayugamaai
Em thunnai aayineer
Neer innum varum kaalamaai
Em nambikkai aaveer.
Verse 2Um aasanaththin nizhale
Bakthar adaikkalam
Um vanmaiyulla puyame
Nichchaya kedagam.
Verse 3Boolokam uruvaakiye
Malaigal thondrumun
Suyambuvaai endrum neere
Maaraa paraabaran.
Verse 4Aayiram aandu umakku
Or naalaip polaame
Yugangal thevareerukku
Or imaikkoppame.
Verse 5Saavukkullana maanidar
Nilaikkave maattaar
Ularndha poovaip pol avar
Uthirndhu pogiraar.
Verse 6Karththave yugayugamaai
Em thunnai aayineer
Ikkattil nat sakaayaaraai
Em niththiya veedaaveer.
Download Song