Kathiravan Thondrum Kalaiyiley
Verse 1கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே - நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
Verse 2வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று, பறவை, ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே
Verse 3காட்டில் கதறி கானக ஒடை
கண்டடையும் வெளி மான்களைப்போல்
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம்
Verse 4கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார்
Verse 5எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவித்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டடைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே
Verse 6காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்
Verse 7வானமும் பு+மி யாவும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர்
Verse 1Kathiravan Thondrum Kalaiyiley
Puthiya Kirubai Polinthiduthey – Nal
Thuthi Seluthiduvom Yesuvukey
Verse 2Vana Sudargal Kanaga Jeevan
Valthidavey Paran Matchimaiyey
Katru, Paravai, Ootru Neerodai
Kartharukkey Kavi Padiduthey
Verse 3Kattil Kathari Kanaga Oodai
Kandadaiyum Veli Mangalaipol
Thagam Theerkum Jeevathaneeram
Tharparan Yesuvai Thediduvom
Verse 4Karthar Kirubai Endrendrum Oongey
Kartharey Nallavar Endruoraipom
Kerubeengal Mathiyil Valum
Karthar Ikkallaiyil Eluntharulvar
Verse 5Enthan Uthadum Unthanai Potrum
Yen Karangal Kuvithey Vanagum
Bageeyam Nan Kandadaintheyney
Yacoubin Devaney Enn Thunaiyey
Verse 6Kalai Vilipey Kartharin Sayal
Kangalum Seviyum Kathirukkum
Patham Amarnthu Vedamey Rusithu
Geethangal Padiyey Magilnthiduven
Verse 7Vanamum Boomi Yavum Padaitheer
Vanam Thiranthey Thondriduveer
Aaval Adanga Ennaiyum Alaika
Aathuma Nesarey Vanthiduveer
Download Song