Verse 1கட்டிடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல -
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல
-கட்டிடம்
Verse 2ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலும் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாகத் தாங்கிடுவார்
-கட்டடம்
Verse 3கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்ப்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய் -கட்டிடம்
Verse 4பாவமாம் மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமோ
ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்
Verse 1kattidam kattidum sirpigal naam
kattiduvom kristhaesu-vukkaai
suththiyal vaiththu adiththalla -
rambathaal maraththai aruththalla
-kattidam
Verse 2ovvoru naalum kattiduvom
ovvoru seyalum karkalaale
uththamar yesuvin asthibaaram
paththiramaagath thaangiduvaar
-kattadam
Verse 3kaivaelai allaa veedondrai
kadavulin poorana siththap padi
kattidum siriya sirppigal naam
kattiduvomae niththiyaththirkaai -kattidam
Verse 4paavamaam manalil kattappatta
parpala veedugal veezhnthidumo
aavalaai yesuvin vaarththai ketpom
avarae moolaikkal aagiduvaar
Download Song