Verse 1கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப் பட்டார்;
’பிதாவே இவர்கட்கு
மன்னிப்பீயும்’ என்றார்.
Verse 2தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.
Verse 3எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.
Verse 4நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன் இயேசுவே
நானும் கூர் ஆணியை.
Verse 5உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்
எண்ணாமல் நான் செய்தேன்.
Verse 6ஆ இன்ப நேச ஆழி!
ஆ திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.
Verse 1koor aani dhaegam paaya
maa vaedhanaip pattaar;
'pithaavae ivarkatku
mannippeeiyum' endraar.
Verse 2tham ratham sinthinoarai
nal meetpar ninthiyaar;
maa dheiva naesaththoadu
ivvaaru jepiththaar.
Verse 3enakkae avvurukkam
enakkae achchebam;
avvidha mannippaiyea
enakkum arulum.
Verse 4neer siluvaiyil saaga
seithadhen aganthai;
kadaavinaen yesuvae
naanum koor aaniyai.
Verse 5um saanthak kandithaththai
naan niththam igazhnthaen;
enakkum mannippeeiyum
ennaamal naan seithaen.
Verse 6aa inba naesa aazhi!
aa thivviya urukkam!
ninthippor ariyaamal
sey paavam manniyum.
Download Song