கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின்
மா ஆச்சரியமான
பெரிய உபகாரத்தின்
உயர்த்திக் கேற்றதான
மன மகிழ்ச்சியுடனே
இருந்து அதின்பேரிலே
சங்கீதம் பாட வேண்டும்.
Verse 2
நான் செய்த புண்ணியங்களை
பார்த்தால் அது செல்லாது;
என் சுயமாய்த் துர்க் கிரியை
ஒழிய நன்றிராது.
மகாதிகில் எடுத்தது
நான் செத்து நரகத்துக்கு
தள்ளுண்பேனென்று தீர்த்தேன்.
Verse 3
இதோ அநாதியாய்ப் பிதா
என்மேலே அன்பை வைத்து
என் கேட்டை நீக்கத் தம்முட
இரக்கத்தை நினைத்து
யாவற்றிலும் உகந்ததை
பாராமல் இந்தப் பாவியை
ரட்சிப்பதற்குத் தந்தார்.
Verse 4
ஒன்றான மைந்தனுடனே
இரங்கக் காலமாமே
என் நஞ்சின் நேச கிரீடமே
போய் ஏழையை நீர்தாமே
மீட்டவன் ஆக்கினைகளை
சுமந்தும்மோடே அவனை
வாழ்வியும் என்று சொன்னார்.
Verse 5
அட்சணமே என்னண்டையில்
திவ்விய மைந்தன் வந்தார்;
ஓர் கன்னிகையின் கர்ப்பத்தில்
என் ஜென்மமாய்ப் பிறந்தார்;
தெய்வீக ஜோதியை நன்றாய்
மறைத்து ஏழை ரூபமாய்
திரிந்தார் பேயை வெல்ல.
Verse 6
என்னோடே அவர் சொன்னது
அஞ்சாதே நான் முன்நிற்பேன்;
நீ என்னைப் பற்றிக்கொண்டிரு
நீ தப்ப நான் மரித்தேன்;
உன் சொந்தம் நான் என் சொந்தம் நீ
நீ என்னில் பக்தியாய்த் தரி
அப்போதென்றும் பிரியோம்.
Verse 7
கொலையுண்டேன் என் ரத்தமும்
சிந்துண்டு செலவாகும்;
இப்பாடுகள் அனைத்தையும்
நீ பற்று உனக்காகும்;
உன் பாவத்தைச் சுமக்கிறேன்;
உன் சாவை நான் விழுங்குவேன்
என் நீதியால் பிழைப்பாய்.
Verse 8
பரத்தில் என் பிதாவண்டை
நான் ஏறிப்போயிருப்பேன்;
அங்குன்னை ஆண்டு ஆவியை
உன் நெஞ்சிலே கொடுப்பேன்;
நீ தேறிக் கொண்டென் அறிவில்
வளர மெய்யின் பாதையில்
உன் காலை நடப்பிப்பார்.
Verse 9
நான் செய்து போதிப்பித்ததை
நீ செய்து போதிப்பித்து
கருத்தாய்த் தெய்வ அறிவை
புவியில் வளர்ப்பித்து
கலப்பாம் போதகத்துக்கு
மா எச்சரிக்கையாயிரு
என்றவர் சொல்லிப் போனார்.
Verse 1
kiristhorkale naam karththarin
maa aachchariyamaana
periya upakaaraththin
uyarththik kaetradhaana
mana magizhchiyudane
irundhu adhinperile
sangeetham paada vaendum.
kolaiyundeen en raththamum
sindhundu selavaagum;
ippaadugal anaiththaiyum
nee pattru unakkaagum;
un paavaththai sumakkireen;
un saavai naan vizhunguvaen
en needhiyaal pizhaippaai.
Verse 8
paraththil en pithaavandai
naan aerippoayiruppaen;
angunnai aandu aaviyai
un nenjile koduppaen;
nee thaerik konden arivil
valara meiyyin paadhaiyil
un kaalai nadappippaar.