Verse 1கிறிஸ்து எம் ராயரே
வந்தாளுகை செய்யும்
வெம் பாவம் நீங்கவே
செங்கோலைச் செலுத்தும்.
Verse 2விரோதம் நீங்கியே
விண்போல மண்ணிலும்
தூய்மையும் அன்புமே
எப்போது செழிக்கும்?
Verse 3உம் வாக்குக்கேற்றதாய்
வீண் போரும் பகையும்
சீர் கேடும் முற்றுமாய்
எப்போது ஒழியும்?
Verse 4எழும்பும் கர்த்தாவே
வல்லராய் வாருமேன்
தாசர் தவித்தோமே
வந்தாற்றித் தேற்றுமேன்.
Verse 5உம் மார்க்கம் நாமமும்
பலர் பழிக்கின்றார்
துர் கிரியை பலரும்
நாணாமல் செய்கின்றார்.
Verse 6தேசங்கள் யாவிலும்
மெய் பக்தி மங்கிற்றே
விண் ஜோதி வீசிடும்
மா விடி வெள்ளியே.
Verse 1Kristhu em raayare
Vandhaalugai seiyyum
Vem paavam neengave
Sengolaich chelutthum.
Verse 2Virodham neengiye
Vinpola mannilum
Thooimaiyum anbumae
Eppodhu sezhikkum?
Verse 3Um vaakkukketrathai
Veen porum pagaiyum
Seer kedum mutrumai
Eppodhu ozhiyum?
Verse 4Ezhumbum karththave
Vallaraai vaarumae
Thaasar thaviththomae
Vandhaatrith thaetrumae.
Verse 5Um maarkkam naamamum
Palar pazhikkindraar
Thur kiriyai palarum
Naanaamal seigindraar.
Verse 6Desangal yaavilum
Mei bakthi mangittrae
Vin jothi veesidum
Maa vidi velliye.
Download Song