குடிக்க யாவரும்
அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின்
ஊற்றின்னம் ஓட்டமான
இப்போதென் ஆவியே
நீ இயேசுவண்டை போ
வேறு யாராகிலும்
ரட்சிக்கக் கூடுமோ.
Verse 2
சீர் கெட்ட உன்னை நீ
ரட்சிப்பது வீணாமே
நீ பற்ற வேண்டிய
சகாயர் கிறிஸ்து தாமே;
பிதாவை இவரே
ஒப்புரவாக்கினார்
இவர்நிமித்தமே
பிதா இரங்கினார்.
Verse 3
உன் பாவக் குற்றங்கள்
உன்னால் நீங்காத கேடு;
மெய் விசுவாசத்தால்
நீ இயேசு வண்டை சேரு;
உன் சுய புத்தியை
நீ பின்பற்றாதே போ
வழிகாட்டுபவர்
தெய்வாவி அல்லவோ.
Verse 4
அன்புள்ள கர்த்தரே
அநேகப் பாவத்தாலே
திகைத்திருக்கிற
நான் வேட்டைக் காரராலே
துரத்தப்பட்டதாம்
மான் போல் தவிக்கிறேன்;
இரக்கத்தின் ஊற்றே
என் தாகந்தருமேன்.
Verse 5
மனத் தரித்திரர்
விண்ணப்பத்தைத் தள்ளீரே;
அவர்கள் பாவத்தை
மன்னிக்கிறிறோ மென்றீரே
அடியேன் உமது
நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்;
ஆ என்னை ரட்சியும்.
Verse 6
என் தவனத்துக்கு
அச்சீவனின் தண்ணீரை
அளியும் கர்த்தரே;
அத்தால் நான் நல்ல சீரை
அடைந்து புதிதாய்ச்
சிஷ்டிக்கப்படுவேன்
ஆ இந்தப் பாக்கியம்
என்மேல் வரட்டுமேன்.
Verse 1
kudikka yaavarum
azhaippu petradhaana
deiveegath thayavin
ootrinnum ottamaana
ippodhen aaviye
nee yesuvandai po
veru yaaraagilum
ratchikka koodumo.
un paavak kutrangal
unnaal neengaadha kedu;
mei visuvaasaththaal
nee yesu vandai seru;
un suya butthiyai
nee pinpatraadhe po
vazhikaattubavar
deivaavi allavo.
Verse 4
anbulla karththare
anegap paavaththaale
thigaiththirukkira
naan vettai kaararaale
thuraththappattadhaam
maan pol thavikkiren;
irakkaththin ootre
en thaagantharumeen.