Verse 1குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு
Verse 2சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ – குருசினில்
Verse 3பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை – குருசினில்
Verse 4சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில்
Verse 5ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார் – குருசினில்
Verse 6எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ – குருசினில்
Verse 1kurusinil thongiyae kuruthiyum vadiya
kolgathaa malai thanilae - nam
guruvaesu suvaami kodun thuyar paavi
kollaai kann konndu
Verse 2sirasinil mulmudi uruththida arainthae
siluvaiyil serththathaiyo - theeyar
thirukkarang kaalgalil aanigaladiththaar
senaiththiral soozha - kurusinil
Verse 3paathagar naduvil paaviyinaesan
paathagan pol thonga - yoota
paathagar parigaasangal pannnip
paduththiya kodumai thanai - kurusinil
Verse 4santhira sooriya sagala vaan senaigal
sagiyaamal naanuthaiyo - thaeva
sunthara maintha nuyir vidu kaatchiyaal
thudikkaa nenjundo - kurusinil
Verse 5eettiyaal saevagan ettiyae kuththa
iraivan vilaavathilae - avar
theettiya theetchai kuruthiyum jalamum
thiranthootrooduthu paar - kurusinil
Verse 6erusalem maathey marugi nee azhuthu
aengip pulambalaiyo - nin
erusalaiyathiban ila manavaalan
eduththa kola mitho - kurusinil
Download Song