Verse 1மா பெரிதாம் நின் கிருபை
சாவரை மறவேனே;
மாதாவின் கர்ப்பத்திருந்தே
மா தயவாய் என்னையே
அழைத்தீரே
மா தவம் நான் செய்தேனோ?
Verse 2அந்தகாரத்தால் நிறைந்து
சொஸ்தமின்றி வாழ்ந்தேனே;
தந்து உம்மைச் சொந்தமாக
என்தனை நீர் மீட்டீரே;
நாதா உம்மை
என்றும் நான் துதிப்பேனே.
Verse 3நான் நினைத்த பாதை வழி
தேன் கசியும் பக்கமே
செல்ல எத்தனித்த போது
அல்லவென்று தடுத்தே
ஆட்கொண்டீரே
ஆண்டாண்டும்மைப் போற்றுவேன்.
Verse 4ஊழியத்தை உண்மையுடன்
வாழ்நாளெல்லாம் செய்யவும்;
நீடும் கிருபை சூடியென்னை
வீடு சேரும்வரையும்
பலவீனம்
தாங்கி தயை செய்வீரே.
Verse 1maa perithaam nin kirubai
saavarai maraveene;
maathaavin karppaththirundhe
maa thayavaai ennaiye
azhaiththeere
maa thavam naan seyththeno?
Verse 2anthakaaraththaal niraindhu
sosthamindri vaazhnthene;
thanthu ummaich sonthamaaga
enthanai neer meetteere;
naathaa ummai
endrum naan thuthippaene.
Verse 3naan ninaiththa paathai vazhi
thaen kasiyum pakkame
sella eththaniththa pothu
allavendru thaduththu
aatkondeere
aandaandummaip pottruvaen.
Verse 4oozhiyaththai unmaiyudan
vaazhnaalellaam seiyavum;
needum kirubai soodiyennai
veedu serum varaiyum
balaveenam
thaangi thayai seiveere.
Download Song