Verse 1மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ
மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ
Verse 2அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
Verse 3உன்பாவம் முற்றும் பரிகரிப்பேனே -அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
Verse 4பாவம் அனைத்துமே விட்டோடாயோ -நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ
Verse 5உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே
Verse 6உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே
Verse 1magane un nenjenakkuth thaaraayo
motcha vaazhvai tharuven idhu paaraayo
Verse 2agaththin asuththamellaam thudaippaene
paava azhukkai neekki arul koduppaene
Verse 3unpaavam muttrum parigarippaene - adhai
unmaiyaai agatra yaan marithaene
Verse 4paavam anaiththume vittodaayo - nithya
paragathi vaazhvai indre thaedaayo
Verse 5ulaga vaazhvinai vittagalvaaye - mahaa
uvappaayk gathi eeven magizhvaaye
Verse 6untran aaththumaththai nee padaippaaye
athil ookkamaai vasikka idam koduppaaye
Download Song