Verse 1மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மறுரூபமாவேன் மனமதிலே
மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் மகமே
Verse 2உந்தன் பாதம் என்னை பலியாய்
உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்
ஏற்றுக் கொண்டருளும்
தேவ பெலன் விளங்கும் -தேற்றி
உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால்
Verse 3தேவ சாயல் தேவ சமுகம் பிள்ளைகள்
அடையும் பாக்கியம் – எந்தன்
வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்
என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால்
Verse 4ஜீவ ஜலமே பொங்கி வருதே
ஜீவ ஊற்றுகள் திறந்தனவே – தம்
கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்
தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால்
Verse 5பாதம் ஒன்றே போதும் என்றேன்
பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன்
இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே
என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால்
Verse 6திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன்
தூய வாழ்க்கையின் தேவை அதுவே
தேவ சேவையிலே பாடு சகித்திடவே
தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால்
Verse 7ஆவி ஆத்மா தேகம் முழுதும்
அன்பர் இயேசுவின் சொந்தமாமே
பூரணம் அருளும் ஆயத்தபடுத்தும்
பாடிப் பறந்திடுவேன் தம் ஆவியினால்
Verse 1magimai mel magimai adainthiduven
maruroobamaaven manamathile
magizhnthidave tharisikkave paran magame
Verse 2unthan paatham ennai baliyaai
unmai manathudan oppadaithen
etru kondarulum
deva belan vilangum - thetri
uyirppiththidum tham aaviyinaal
Verse 3deva saayal deva samugam pillaigal
adaiyum paakkiyam - enthan
vaanjaiyithe endru sernthiduven
ennai nirappidume tham aaviyinaal
Verse 4jeeva jalamē pongi varuthe
jeeva ootrukal thiranthanave - tham
karam pidithen angu vazhi nadaththum
thaagam theerthiduven tham aaviyinaal
Verse 5paatham ondre pothum endren
pesum aandavar thoniyum ketten
inba vaakkugale enthan bojaname
ennai belappaduththum tham aaviyinaal
Verse 6thivya gunangal naadi jebiththen
thooya vaazhkkaiyin thevai athuve
deva sevaiyile paadu sagiththidave
thaarum porumai belan tham aaviyinaal
Verse 7aavi aathmaa thegam muzhuthum
anbar yesuvin sonthamaame
pooranam arulum aayaththapaduththum
paadip paranthiduven tham aaviyinaal
Download Song