Verse 1மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
Verse 2துணை பிரியாது, தோகையிம்மாது
துப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது - நல்ல --- மண
Verse 3ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா,
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? - நல்ல --- மண
Verse 4குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல --- மண
Verse 5மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறையுமே தாவி
மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல --- மண
Verse 1Manavaazhvu puvi vaazhvinil vaazhvu - mangala vaazhvu
Maruviya sobana suba vaazhvu
Verse 2Thunnai piriyaathu, thogaiyimaathu
Thuba mana magalivar ithupothu
Manamurai yothu vasanam vidaathu
Vanthana rumatharull peravaethu - Nalla --- mana
Verse 3Jeeva thayaakaraa, sirushtiyathikaaraa
Theiveega maamana valangaaraa,
Thevakumaaraa, thiruvellyooraa
Sernthavarkkarull tharaa thiruppeeraa? - Nalla --- mana
Verse 4Kudiththana veeram, gunamulla thaaram
Koduththuk kondalathu samusaaram
Adakkamaasaaram, anbu, uthaaram
Ambuvi thanil manaikkalangaaram - Nalla --- mana
Verse 5Manral sei thevi, manaallanukkaavi
Manthiram avar kuraiyume thaavi
Manriyip puvi yamarntha sanjeevi
Avalaiyillaathava noru paavi - Nalla --- mana
Download Song