Manu Sutha Em Veera Valla
Verse 1மனு சுதா எம் வீரா வல்ல அன்பா!
உம் தொண்டரே இப்பாரில் தீரராம்;
எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா!
உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்.
Verse 2மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே
சத்திய வார்த்தை நீர் அருளினீர்;
அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே
வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்.
Verse 3பாலியர் போதகா இளைஞர் நேசா!
மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்;
நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா!
எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்.
Verse 4ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம்
எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்;
செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்!
இல்லார் நல் தோழா தாழ்வில் தங்கிடும்.
Verse 1Manu sudhaa em veeraa valla anbaa!
Um thondare ippaaril theeraraam;
Em inbam thunbam sagikkum maa nanbaa!
Umakku naangal jeeva baliyaam.
Verse 2Maa kashta paadhai sendreer dhevareere
Saththiya vaarththai neer arulineer;
Anbodu kaattup pushpam viyandheere
Vaalibar veeram kande magizhndheer.
Verse 3Baaliyar bodhagaa ilainjar nesaa!
Maandharin vendhar oozhiyanum neer;
Nambikkai aarudhal inbaththin naadhaa!
Em nokkam inbam bayam aaluveer.
Verse 4Aarudhal eeyum anbarai anduvom
Emmodirum em tholvi thunbilum;
Selvar virundhaa! Inbaththil venduvom!
Illaar nal thozhaa thaazhvil thangidum.
Download Song