Mayangum Thaasanai Naatha
Verse 1மயங்கும் தாசனை
நாதா நீர் நடத்தும்;
என் பாதைகாட்டியாய்
சகாயம் புரியும்.
Verse 2நீர் காட்டும் பாதைதான்
எப்போதும் நல்லதே;
சுற்று நேர் ஆயினும்
விண் வீடு சேர்க்குமே.
Verse 3என் சித்தம் ஆபத்தாம்
உம் சித்தம் நாடுவேன்;
நான் செல்லும் பாதையை
நீர் காட்டக் கெஞ்சுவேன்.
Verse 4நான் தேடும் ராஜியம்
உம் சொந்தமானதே;
அங்கென்னைச் சேர்த்திடும்
பாதையும் உம்மதே.
Verse 5உம் சித்தம்போல நீர்
என் பாத்திரம் எடுத்தும்
சந்தோஷம் சஞ்சலம்
ஏதாலும் நிரப்பும்.
Verse 6வியாதி சுகமோ
இஷ்டர் பகைஞரோ
வறுமை செல்வமோ
சிறிதோ பெரிதோ.
Verse 7என் இஷ்டம் எதிலும்
வேண்டாம்; என் நாதரே
என் வழிகாட்டியாம்
நீர் சர்வ ஞானரே.
Verse 1mayangum thaasanai
naathaa neer nadaththum;
en paathaikaattiyaai
sakaayam puriyum.
Verse 2neer kaattum paathai thaan
eppothum nallathe;
suttru ner aayinum
vin veedu serkkume.
Verse 3en siththam aabaththaam
um siththam naaduven;
naan sellum paathaiyai
neer kaatta kenjuven.
Verse 4naan thedum raajiyam
um sonthamaanathe;
angennaich serththidum
paathaiyum ummathe.
Verse 5um siththampola neer
en paaththiram eduththum
santhosham sanjalam
ethaalum nirappum.
Verse 6viyaathi sukamo
ishtar pagaiñaro
varumai selvamo
siritho peritho.
Verse 7en ishtam ethilum
vendaam; en naathare
en vazhikaattiyaam
neer sarva gnaanare.
Download Song