LyricFront

Menmai Niraintha Aandavar

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மேன்மை நிறைந்த ஆண்டவர் பூலோகத்தார் எல்லார்க்கும் தகுந்த நீதி செய்பவர் இறங்கும் நாள் உதிக்கும் அப்போது மா பிரஸ்தாபமாய் எங்கும் விளங்கும் ஜோதியாய் மின்போலத் தோன்றுவாரே.
Verse 2
இலக்கமற்ற தூதர்கள் அவர்க்கு முன்னதாக பலத்த சத்த தாரைகள் உடையவர்களாக முழக்கம் செய்ய பூமியும் விஸ்தாரமான வானமும் கரைந்து வெந்துபோகும்.
Verse 3
அத்தூதரின் எக்காளங்கள் எத்திக்கிலும் முழங்கும் அந்நேரம் மாந்தர் கூட்டங்கள் உயிரடைந்தெழும்பும் ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும் ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும் வணக்கமாய் நிற்பார்கள்.
Verse 4
சன்மார்க்கர் மோட்ச பாதையில் நடந்ததால் மகிழ்ந்து சிறப்படைந்து நிற்கையில் துன்மார்க்கரோ அதிர்ந்து நியாயமான சாபத்தை அடைந்து கர்த்தர் முகத்தை விட்டோடி மாளுவார்கள்.
Verse 5
என் மனமே துன்மார்க்கத்தை வெறுத்துத் தள்ளிவிட்டு அன்புள்ள இயேசு கிறிஸ்துவை நம்பிக்கையாய்ப் பிடித்து கறையும் மாசுமின்றியே கர்த்தர் முன்பாக நிற்கவே நீ ஆவலோடு தேடு.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?