மின்னும் வெள்ளங்கி பூண்டு
மீட்புற்ற கூட்டத்தார்
பொன்னகர் செல்லும் பாதையில்
பல் கோடியாய்ச் செல்வார்
வெம் பாவம் சாவை இவர்
வென்றார் போர் ஓய்ந்ததே
செம்பொன்னாம் வாசல் திறவும்
செல்வார் இவர் உள்ளே.
Verse 2
முழங்கும் அல்லேலூயா
மண் விண்ணை நிரப்பும்
விளங்கும் கோடி வீணைகள்
விஜயம் சாற்றிடும்
சராசரங்கள் யாவும்
சுகிக்கும் நாள் இதே;
இராவின் துன்பம் நோவுக்கு
ஈடாம் பேரின்பமே.
Verse 3
அன்பான நண்பர் கூடி
ஆனந்தம் அடைவார்;
மாண்பான நேசம் நீங்காதே
ஒன்றாக வாழுவார்;
கண்ணீர் வடித்த கண்கள்
களித்திலங்கிடும்
மண்ணில் பிரிந்த உயிர்கள்
மீளவும் சேர்ந்திடும்
Verse 4
சிறந்த உந்தன் மீட்பை
சமீபமாக்குமே
தெரிந்து கொள்ளப்பட்டவர்
தொகை நிரப்புமே;
உரைத்த உந்தன் காட்சி
உம்பரில் காட்டுவீர்
இறைவா ஏங்கும் தாசர்க்கு
இறங்கி வருவீர்.
Verse 1
minnum vellangi poondu
meetputra koottathaar
ponnagar sellum paathaiyil
pal kodiyaai selvaar
vem paavam saavai ivar
vendraar por oynthathae
semponnaam vaasal thiravum
selvaar ivar ullae.