Verse 1நான் பலவீன தோஷியாம்
நீர் தயாமூர்த்தியே;
நின் பாதத் தூளும் மேலிடும்
நிர்ப்பந்த நீசனே.
Verse 2எப்பாவம் வெட்கம் எட்டிடா
ஏகாந்த ஜோதியே
எம் பாவம் நிந்தை தாங்கினீர்;
என் சொல்வேன் அன்பையே!
Verse 3பிதாவின் மாட்சி ஆசனம்
அபாத்திர பாவிக்காய்
சுதா நீர் நீத்து மாந்தர் தம்
சரீரம் எடுத்தீர்.
Verse 4கை காலில் ஆணி பாய்ச்சுங்கால்
சகித்தீர் சாந்தமாய்;
ஐயா எந்நாமம் சாற்ற உம்
பொறுமை தூய்மைக்கே!
Verse 5அன்பே நீர் மாந்தர் ஆகினீர்
என் அன்பைப் பெற்றிட;
நான் பாவி தோஷி வெட்கத்தால்
முன்னிற்கத் துணியேன்.
Verse 6உம் தயை அன்பால் மட்டுமே
நான் பாத்திரன் ஆயினேன்;
உன் தாசர் காக்கும் வண்ணமே
காப்பீர் நீர் என்னையும்.
Verse 1Naan balaveena doshiyaam
Neer dhayaamoorthiye;
Nin paadhath thoolum melidum
Nirbandha neesane.
Verse 2Eppaavam vetkam ettidaa
Ekaandha jothiye
Em paavam nindhai thaangineer;
En solven anbaiye!
Verse 3Pithaavin maatchi aasanam
Apaaththira paavikkaai
Sudhaa neer neeththu maandhar tham
Sareeram eduththeer.
Verse 4Kai kaalil aani paaychchungaal
Sagiththeer saanthamaai;
Aiyaa en naamam saatra um
Porumai thooimaikke!
Verse 5Anbe neer maandhar aagineer
En anbaip petridha;
Naan paavi thoshi vetkaththaal
Munnirkath thuniyen.
Verse 6Um dhayai anbaal mattume
Naan paaththiran aayinen;
Un thaasar kaakkum vanname
Kaappeer neer ennaiyum.
Download Song