நான் உம்மை முழுமனதால்
சிநேகிப்பேன் என் இயேசுவே
நான் உம்மை நித்தம் வாஞ்சையால்
பின்பற்றுவேன் என் ஜீவனே
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
Verse 2
நான் உம்மை நேசிப்பேன் நீர்தாம்
என் உத்தம சிநேகிதர்
நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம்
நீரே என் மீட்பரானவர்
நான் உம்மை முன் சேராததே
நிர்ப்பந்தம் வெட்கம் நஷ்டமே.
Verse 3
உம்மைப் பற்றாமல் வீணணாய்
பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்
பரத்தை விட்டுத் தூரமாய்
இகத்தை அன்பாய்ப் பற்றினேன்
இப்போ நான் உம்மைச் சேர்ந்தது
நீர்தாமே செய்த தயவு.
Verse 4
நான் உம்மைச் சுக வாழ்விலும்
சிநேகிப்பேன் என் கர்த்தரே
நான் உம்மைத் துன்பநாளிலும்
நேசிப்பேன் எந்தன் இயேசுவே
என் சாவு வேளை மட்டும் நீர்
என் நெஞ்சில்தானே தங்குவீர்.
Verse 1
naan ummai muzhumanathaal
sinegippen en yesuvae
naan ummai niththam vaanjaiyal
pinpattruvaen en jeevanae
en saavu vaelai mattum neer
en nenjilthaanae thanguveer
Verse 2
naan ummai naesippaen neerthaam
en uththama sinegithar
neer deiva aattukkuttiyaam
neerae en meetparaanavar
naan ummai mun saeraathathae
nirppantham vetkam nashtamae