நல் மீட்பரே உம்மேலே
என் பாவம் வைக்கிறேன்;
அன்புள்ள கையினாலே
என் பாரம் நீக்குமேன்;
நல்மீட்பரே உம்மேலே
என் குற்றம் வைக்க நீர்
உம் தூய ரத்தத்தாலே
விமோசனம் செய்வீர்.
Verse 2
நல் மீட்பரே உம்மேலே
என் துக்கம் வைக்கிறேன்;
இப்போதிம்மானுவேலே
எப்பாடும் நீக்குமேன்;
நல் மீட்பரே உம்மேலே
என் தீனம் வைக்க நீர்
உம் ஞானம் செல்வத்தாலே
பூரணமாக்குவீர்.
Verse 3
நல் மீட்பரே உம்பேரில்
என் ஆத்துமா சார நீர்
சேர்த்து உம்திவ்விய மார்பில்
சோர்பெல்லாம் நீக்குவீர்;
நேசா! இம்மானுவேலே!
இயேசென்னும் நாமமும்
உகந்த தைலம் போலே
சுகந்தம் வீசிடும்.
Verse 4
நல்மீட்பரே பாங்காக
அன்போடு சாந்தமும்
நீர்தந்தும் சாயலாக
சீராக்கி மாற்றிடும்;
நல்மீட்பரே உம்மோடு
பின் விண்ணில் வாழுவேன்;
நீடூழி தூதர் பாட
பாடின்றிப் பூரிப்பேன்.
Verse 1
Nal meetpare ummele
En paavam vaikiren;
Anbulla kaiyinaale
En baaram neekkumeen;
Nal meetpare ummele
En kutram vaikka neer
Um thooya raththathaale
Vimosanam seiveer.
Verse 2
Nal meetpare ummele
En thukkam vaikiren;
Ippothimmaanvele
Eppaadum neekkumeen;
Nal meetpare ummele
En theenam vaikka neer
Um gnanam selvathaale
Pooranamoakkuveer.