Namathu Yesu Christhuvin Namam
Verse 1நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்
Verse 2தேவகிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்தரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்
Verse 3அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார்
Verse 4பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார்
Verse 5பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள்புரிவார்
Verse 6நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில்
Verse 7பரமனேசு வந்திடும்போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீ^ழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம்
Verse 1Namathu Yesu Christhuvin Namam
Nanilamengum Ohgindavey
Punithamana Parisutha Valzvai
Manitharam Emakalithar
Verse 2Devakirubai Engum Peruga
Devanai Sthotharipom
Pava Irul Agala
Deva Oli Adaintham
Verse 3Avarai Nokee Kupidum Velai
Ariviparey Arputhangal
Engettatha Arinthidalaga
Ethanaiyo Pathilalithar
Verse 4Patharipona Pavigalaga
Sithari Engumey Alainthom
Avarai Nam Therinthariyomey
Avar Nammai Therintheduthar
Verse 5Balatha Jathi Ayramaga
Padarnthu Ongi Nam Valara
Elimaiyum Sirumaiyumana
Emmakavar Arulpurivar
Verse 6Namathu Kalgal Mangalai Pola
Nadanthu Odi Painthedavey
Uyar Sthalathil Ettrukindrarey
Unnathamana Oliyathil
Verse 7Paramenayesu Vanthidumpothu
Paranthu Namum Sendriduvom
Paramanodu Needuli Valum
Parama Bakiyam Peruvom
Download Song