Verse 1நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும்
ஜீவிக்கிறார் - அவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்
Verse 2நான் பாடி மகிழ்ந்திடுவேன், என் இயேசுவைத்
துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில்
அமர்ந்திருப்பேன்
Verse 3கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் அவர் வருவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்!
Verse 4பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கிவிழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்!
Verse 5தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார்!
Verse 6நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே!
Verse 1naan nesikkum devan yesu indrum
jeevikkiraar - avar
netrum indrum naalai endrum maaraathavar
Verse 2naan paadi magizhntiduven, en yesuvaith
thuthithiduven
en jeeviya kaalamellaam avar paathaththil
amarnthiruppen
Verse 3kadalaam thunbaththil thavikkum velaiyil
padagaai avar varuvaar
irulthanile pagalavanaai
yesuve oli tharuvaar!
Verse 4paava nooyaale vaadum neraththil
maruththuvaraagiduvaar
mayangivizhum pasithanile
mannaavaith thanthiduvaar!
Verse 5thootrum maantharin naduvil enthanaith
thetrida vanthiduvaar
kaal thalara oontrukolaai
kaaththida vanthiduvaar!
Verse 6nesar ennodu thunaiyaai jeevikka
naan ini kalangidene
enthanukke kaaval avar
naan udal avar uyire!
Download Song