Verse 1நான் பாவிதான் - ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்
Verse 2நான் பாவிதான் - என் நெஞ்சிலே
கறைபிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன்
Verse 3நான் பாவிதான் - மாபயத்தால்
திகைத்து பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன்
Verse 4நான் பாவிதான் - மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே வந்தேன்
Verse 5நான் பாவிதான் - இரங்குவீர்
அணைத்து காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன்
Verse 6நான் பாவிதான் - அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்
உமக்கு சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன்
Verse 1naan paavi thaan - aanaalum neer
maasatra raththam sinthineer
vaa endru ennai azhaitheer
en meetpare vanthen - vanthen
Verse 2naan paavi thaan - en nenjile
karaipidiththuk kettene
en karai neenga ippothe
en meetpare vanthen
Verse 3naan paavi thaan - maapayaththaal
thigaiththu paava paaraththaal
azhzhinthu maandu povathaal
en meetpare vanthen
Verse 4naan paavi thaan - meyyaayinum
seer nermai selvam motchamum
ataivatharku ummidam
en meetpare vanthen
Verse 5naan paavi thaan - iranguveer
anaiththu kaaththu ratchippeer
arulaam selvam alippeer
en meetpare vanthen
Verse 6naan paavi thaan - anbaaga neer
neengaa thadaigal neekkineer
umakku sontham aakkineer
en meetpare vanthen
Download Song