Verse 1நேசரவர் என் நேசரவர்
நேசரிலெல்லாம் விசேஷித்தவர்
சோகமடைந்தேன் நேசமதால் - நேசரவர்
Verse 2வெண்மையும் சிவப்புமானவரே கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே
பதினாயிரங்களில் சிறந்தவரே
அதிசயமானவர் அவர் பெயரே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே
Verse 3அவர் தலை முழுவதும் பொன்சின்மயமாய்
அவர் தலை மயிர் சுருள் சுருளாக
காகத்தின் நிறம் அவர் முடியாமே
லோகத்தின் ஒளிவிளக்கவராமே
Verse 4அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்
கவரும் புறாக் கண்கள் போன்றவைகள்
பாலிலே கழுவப்பட்டவைகள்
நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள்
Verse 5அவரின் கன்னங்கள் உதடுகளாம்
மலர்களின் வாசனை வீசிடுமாம்
தங்க வளையல் போல் அவர் கரமாம் !
தந்தத்தைப் போல் அங்கம் உடையவராம்
Verse 6வார்த்தை பேசிடும் வாய் மதுரமாமே
வார்த்தைகள் கிருபை பொழிந்திடுமே
வார்த்தை என்பது அவர் ஒரு பெயரே
வார்த்தைகளால் துதி சாற்றிடவே
Verse 7ரூபமதில் அவர்க்கிணை அவரே
லீபனோன் மகிமை உடையவரே
கேதுரு போல் அவர் உயர்ந்தவரே
ஏதமிலா சிறப்பானவரே
Verse 8துள்ளிக் குதித்து மலை மேட்டினிலே
வந்திடும் நேசரின் தொனியதுவே
ஆரவார சப்தம் முழங்கிக் கொண்டே
மேகத்தில் ஜோதியாய் தோன்றுவாரே
Verse 9இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே
Verse 1Nesaravar en nesaravar
Nesarilellaam visheshiththavar
Sogamadaindhen nesamadhaal - nesaravar
Verse 2Vennmaiyum sivappumaanavare kannai kavarndhidubavar avare
Pathinaayirangalil sirandhavare
Athisayamaanavar avar peyare
Ivaren aaththuma nesare
Varuvaar enakkaai vegame
Verse 3Avar thalai muzhuvathum ponsinmayamaai
Avar thalai mayir surul surulaaga
Kaagaththin niram avar mudiyaame
Logaththin olivillakkavaraame
Verse 4Avar kangal kanneer nirainthavaigal
Kavarum puraak kangal pondravaigal
Paalile kazhuvappattavaigal
Nerththiyaai pathikkappattavaigal
Verse 5Avarin kannangal uthadugalum
Malargalin vaasanai veesidumaam
Thanga valaiyal pol avar karamaam!
Thanthaththaip pol angam udaiyavaraam
Verse 6Vaarththai pesidum vaai mathuramaame
Vaarththaigal kirubai pozhinthidume
Vaarththai enbathu avar oru peyare
Vaarththaigalaal thuthi saattridave
Verse 7Roobamathil avarkkinai avare
Leebanon magimai udaiyavare
Kethuru pol avar uyarnthavare
Ethamilaa sirappaanavare
Verse 8Thullik kuthiththu malai mettinile
Vanthidum nesarin thoniyathuve
Aaravaara saptham muzhangik konde
Megaththil jothiyaai thondruvaare
Verse 9Ivaren aaththuma nesare
Varuvaar enakkaai vegame
Download Song