Nirappum Yennai Thuthiyal
Verse 1நிரப்பும் என்னைத் துதியால்
முற்றாகக் கர்த்தரே
என் தேகம் மனம் ஆன்மாவும்
உம்மையே கூறவே
Verse 2துதிக்கும் நாவும் உள்ளமும்
போதாதென் ஸ்வாமியே
என் வாழ்க்கை முற்றும் யாவுமாய்
துதியதாகவே.
Verse 3சாமானிய சம்பவங்களும்
என் போக்கும் வரத்தும்
மா அற்ப செய்கை வேலையும்
துதியதாகவும்.
Verse 4நிரப்பும் என்னை முற்றுமாய்
சமூலம் போற்றவும்
உம்மை உம் அன்பை ஏழையேன்
துதித்திடச் செய்யும்.
Verse 5பெறுவீரே நீர் மகிமை
என்னாலும் என்னிலும்
இம்மையிலே துடங்குவேன்
சதா விண் பாடலும்.
Verse 6கவலை கோபம் பயமும்
கீதமாய் மாறிடும்
என் ஜீவ பாதை யாவிலும்
கீதம் தொனித்திடும்.
Verse 7இராப் பகல் விநாடியும்
விளங்கும் தூய்மையாய்
என் வாழ்க்கை முற்றும் சேர்ந்திடும்
உம்மோடு ஐக்கியமாய்.
Verse 1nirappum ennaith thuthiyaal
muttraagak karththare
en thaegam manam aanmaavum
ummaiyae kooravae
Verse 2thuthikkum naavum ullamum
pothaathen svaamiyae
en vaazhkkai muttum yaavumaai
thuthiyathaagavae.
Verse 3saamaaniya sambavangalum
en pokkum varaththum
maa atpa seigai vaelaiyum
thuthiyathaagavum.
Verse 4nirappum ennai muttumaai
samoolam potravum
ummai um anbai aezhaiyaen
thuthiththidach seyyum.
Verse 5peruveerae neer magimai
ennaalum ennilum
immaiyilae thudanguvaen
sadhaa vinn paadalum.
Verse 6kavalai kobam bayamum
geethamaai maaridum
en jeeva paathai yaavilum
geetham thoniththidum.
Verse 7iraap pagal vinaadiyum
vilangum thooymaiyaai
en vaazhkkai muttum saernthidum
ummodu aikkiyamaai.
Download Song