ஒன்றே தேவை என்றுரைத்தீர்
ஸ்வாமி அதை நாடுவேன்;
என்னை உம்மண்டைக் கழைத்தீர்
நான் உலகை எத்தனை தழுவினாலும்
பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும்
அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான்
அடைந்தால் நான் பூரண பாக்கியவான்.
Verse 2
இதைச் சிஷ்டிகளிடத்தில்
தேடினால் கிடையாதே;
இயேசு ஸ்வாமியின் வசத்தில்
வாழ்வெல்லாம் இருக்குமே;
என் ஆத்துமமே உன் இக்கட்டில் உவாவும்
இம்மானுவேலே பரிபூரணம் யாவும்
அகப்படப் பண்ணுவர் அவரை நீ
உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி.
Verse 3
இந்தப் பங்கையே மரியாள்
தனக்குத் தெரிந்தாளே
வாஞ்சையாகிய பசியால்
கிறிஸ்தின் பாதத்தண்டையே
இருந்து தன் போதகர் சொன்ன தெய்வீக
மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக
சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே
அடைந்த்தால் மனத்தில் பூரித்தாளே.
Verse 4
நானும் அந்த வாஞ்சையோடே
உம்மையே என் இயேசுவே
அண்டிக்கொண்டேன் நீர் என்னோடே
ஐக்யமாகும் ஜீவனே
பெருங் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும்
நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும்
தொடருவேன் உமக்குள் யாவும் உண்டே.
நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே.
Verse 5
ஞானத்தின் எல்லா நிறைவும்
உம்மில் இருக்கின்றது;
கீழ்ப்படிகிற இசையும்
ஞானங் கற்கிறதற்குத்
தாழ்வாகிய சிந்தையும் என்ல் உண்டாக
நீர் எனக் கொத்தாசையைப் பண்ணுவீராக.
நன்றாக நான் உம்மையே கற்றுக்கொண்டே
அறிந்தால் நான் தேறின ஞானியாமே.
Verse 6
உம்மை மாத்திரம் முன்னிட்டுக்
கர்த்தரை நான் சேரலாம்;
சிலுவையிலே மரித்து
ரத்தஞ் சித்தின நீர்தாம்
என் நித்திய நீதி; இதன்றி அடியேன்
ரட்சிப்பை அடைய வேறொன்றும் அறியேன்;
உம்மண்டை ஒதுங்கின பாவியை நீர்
வெண் வஸ்திரத்தாலே அலங்கரித்தீர்.
Verse 7
நான் தெய்வீகச் சாயலான
புதுச் சிஷ்டியாக நீர்
என்னைப் பரிசுத்தமான
மனிதனுமாக்குவீர்.
நீர் அதற்குமாகக் கொடுக்கப் பட்டோரே
நீர் அதற்குச் சகல ஈவுமுள்ளோரே.
நீர் என்னை அழிந்துபோம் இச்சைக்கெல்லாம்
விலக்கிக் காப்பாற்றும் என் ஜீவன் நீர் தாம்.
Verse 8
தேவரீரின் மீட்பினாலே
மா பூரிப்பாகின்றது;
உம்முடைய ரத்தத்தாலே
ஓர் முறை பரத்துக்கு
நீர் உட்பிரவேசித்து நித்தியமான
ரட்சிப்பை உண்டாக்கிப் பிசாசுக்குண்டான
பலத்தை முறித்தால் நீங்கலானேன்
கர்த்தாவை அப்பா என்றும் தொழுகிறேன்.
Verse 9
இப்போ பூரணக் களிப்பு
என் நெஞ்சை நிரப்பிற்று;
நல்ல மேய்ச்சலின் தித்திப்பு
என்னைத் திருப்தி யாக்கிற்று.
உம்மோடே நான் ஐக்கியமாய் ஆறுதலுக்கும்
நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதற்கும்
சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன்
சரியாந் தித்திப்பை ருசித்துமிரேன்.
Verse 10
ஆகையாலே நான் தெரிந்து
பற்றும் பேறெல்லாம் நீரே;
என்னை நீர் ஆராய்ந்தறிந்து
உண்மையாக்கும் இயேசுவே;
நான் போம் வழி வாதையாமோ என்று பாரும்
என் கால்களை மோட்ச வழியிலே காரும்.
நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டெ
இருக்குவும்; மற்றது குப்பையாமே.