Verse 1பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்.
Verse 2பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் - பாவி
Verse 3நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே;
தேவா, உன் வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான் - பாவி
Verse 4பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் - பாவி
Verse 5ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன்,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் - பாவி
Verse 6துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர்;
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் - பாவி
Verse 7உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் - பாவி
Verse 1paaviyaagavae vaaraen; paavam pokkum
baliyaam en yaesuvae, vaaraen.
Verse 2paavakkaraai poamo en paadaal? un paadaalandrip
povadhillai endrae pollaadha paaviyae naan - paavi
Verse 3nee vaa, un paavam ennaal neengum endru sonneerae;
thaevaa, un vaakkai nambi seerkedan neesanum naan - paavi
Verse 4paeimarul ulagudal paeraasaiyaal mayangip
poayum avatrodu poril ayarchchiyaai naan - paavi
Verse 5jeeva selva gnaana seela sugangal attren,
thaavendru vaendiya saavil sanjarittha naan - paavi
Verse 6thunbangal neekki unnaith thookki annaippaen endreer;
inba vaakkuththaththai indraikkae nambiyae naan - paavi
Verse 7unnaich saera ottaamal oondriya thadai yaavum
unnanbaal neengi nal uyir adainthoongavae naan - paavi
Download Song