Verse 1பாடுவோம் மகிழ்வோம்
கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்
Verse 2அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே - நன்றி
Verse 3துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
என் பிரியமும் நீர்தானையா
Verse 4கல்வாரி சிலுவையினால் - என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் - இந்த
அடிமைக்கு கிடைத்ததையா
Verse 5இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து - உம்
அன்பை ஊற்றினீரே
Verse 6உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் - என்
உயிரான கிறிஸ்து வந்தால் - உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
Verse 7இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா - உம்
மிகுந்து இரக்கத்தினால்
Verse 8வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே - கடும்
வெயிலில் குளிர் நிழலே
Verse 9பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு - அது
எத்தனை மேலானது
Verse 1paaduvom magizhvom
kondaaduvom
appaa samugaththil paadi
magizhndhu kondaaduvom
Verse 2akkini madhil neerae
aarudhal mazhai neerae
ikkattil thunai neerae
irulil velichcham neerae - nandri
Verse 3thuyar neekkum maruththuvarae
en thudhikkup paaththirarae
belanellaam neerdhaanaiyaa
en piriyamum neerdhaanaiyaa
Verse 4kalvaari siluvaiyinaal - en
saabanggal udaindhadhaiyaa
aabiragaamin aaseervaathanggal - indha
adimaikku kidaiththadhaiyaa
Verse 5yesuvae um iraththaththaal
ennai needhimaanai maatrineerae
parisuththa aavi thandhu - um
anbai ootrineerae
Verse 6ummaiyae nambi vaazhvadhanaal
umakkae sondhamaanen - en
uyiraana kristhu vandhaal - um
uravukkul vandhuvittaen
Verse 7ivvulagap pokkinpadi
naan vaazhndhaen balanaatkal
ummodu inaiththeeraiyyaa - um
migundhu irakkaththinaal
Verse 8vaazhvu tharum oottru neerae
vazhikaattum dheebam neerae
puyalil pugalidamae - kadum
veyilil kulir nizhalae
Verse 9paerinba neerootaiyil
en thaagam thanippavarae
umadhu paeranbu - adhu
eththanai maelaanadhu
Download Song