எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்; பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான
எருசலேமே
Verse 3
ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நிழலடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான
எருசலேமே
Verse 4
சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வ லோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என்
எருசலேமே
கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மன நோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலை
நகராம் எருசலேமே