Verse 1பாரீர் கெத்சமனே பு ங்காவில் என் நேசரையே
பாவி உனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே
Verse 2தேகமெல்லாம் வருத்தி சோக மடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே
Verse 3அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன் என்றாரே ;
Verse 4இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தனரே
Verse 5என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தை
எண்ணியெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்
Verse 6மும்முறை தரை மீதே தாங்கொண்;ணா வேதனையால்
முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே ;
Verse 7அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவார் இன்றியே நொந்து அலறுகின்றாh
Verse 1paareer gethsamane poongaavil en nesaraiyae
paavi unakkaai vaenduthal seithidum satham thoniththiduthae
Verse 2thaegamellaam varuththi soga matainthavaraai
thaevaathi thaevan aega suthan padum paadugal enakkaayae
Verse 3appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
eppadiyum um siththam seyya ennai thaththam seithean enraarae ;
Verse 4iraththaththin vaervaiyaalae meththavumae nanainthae
immaanuvaelan ullam urukiyae vaenduthal seithanarae
Verse 5ennaiyum thammaip pola maatrum immaanaesaththai
enniyenniyae ullam kaninthu naan endrum pugazhnthiduvaen
Verse 6mummurai tharai meethae thaangon;naa vaethanaiyaal
munnavan thaamae veezhnthu jepiththaarae paathagar meetpuravae ;
Verse 7anbin arul mozhiyaal aaruthal alippavar
thunba vaelaiyil thaettruvaar indriyae nonthu alarugindraar
Download Song