Piranthar piranthar vanaver puvi
Verse 1பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
Verse 2மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
Verse 3பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
Verse 4பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார்
Verse 5கந்தை துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
Verse 6இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்
Verse 1piranthaar piranthaar
vaanavar puvi maanidar pugazh
paadida piranthaar
Verse 2maattuth thozhuvam therintheduththaar
maa deva devane
menmai veruththaar thaazhmai thariththaar
maa thiyaagiyaai valarnthaar
Verse 3paava ulaga maanidar mel
paasam adainthavare
manakkaarirulai emmil neekkidum mei
maa jothiyaaith thigazhnthaar
Verse 4porumai thaazhmai anburukkam
perunthanmai ullavare
maranam varaiyum thannaith thaazhthinathaal
melaana naamam petraar
Verse 5kanthai thuniyo karththarukku
kadum ezhaik kolamatho
vilaiyerap petra udai alangaripum
veen aasaiyum namakken
Verse 6yesu piranthaar ullamathil
ithai engum saattriduvom
pusippum kudippum deva raajyamalla
paran aaviyil magizhvom
Download Song