Pirathaana Thuuthan Ekkaalam
Verse 1பிரதான தூதன் எக்காளம் முழங்க
பரமன் இயேசு வருவார்
Verse 2சாயங்காலத்திலோ நடுராவினிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
அதிகாலையிலோ எந்த வேளையிலோ
பரமன் இயேசு வருவார்
Verse 3இருவர் வயலில் இருப்பார்
இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார்
ஒருவர் கைவிடப்படுவார்
ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர்
Verse 4நோவா காலத்தின் சம்பவம்போல்
நடந்திடும் அந்த நாட்களிலே
புசித்தும் குடித்தும் பெண்கொண்டும்
பலர் அசந்து வெறித்திருப்பார்
Verse 5லௌகிகக் கவலைகளினாலும்
இலட்சை மிகுந்த வெறியினாலும்
எம் இதயம் பாரமடையாமல்
எச்சரிக்கையுடன் காத்திருப்போம்
Verse 6இரவும் பகலும் விழிப்பாய்
இருதயம் நொருங்கி ஜெபிப்போம்
கற்புள்ள கன்னிகையாக நாமும்
கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம்
Verse 7தவிக்கும் உலகம் அந்த நாளில்
தலைகளை உயர்த்தி நடப்போம்
வருகை நெருங்க கர்த்தர் இயேசு
வாசற்படியில் வந்து நிற்கிறார்
Verse 1piradhaana dhoodhan ekkaalam muzhanga
paraman yesu varuvaar
Verse 2saayangaalaththilo naduraavinilo
seval koovidum neraththilo
adhikaalaiyilo endha velaiyilo
paraman yesu varuvaar
Verse 3iruvar vayalil iruppaar
irandu sthirigal yendhiram araippaar
oruvar kaividappaduvaar
yetrukkollappaduvaar oruvar
Verse 4noovaa kaalaththin sambavambol
nadanthidum andha naatkalile
pusiththum kudiththum penkondum
palar asandhu veriththiruppaar
Verse 5loukigak kavalaihalinaalum
ilatchai mihundha veriyinaalum
em idhayam baaramadaiyamal
echcharikkaiyudan kaaththiruppom
Verse 6iravum pahalum vizhippai
irudhayam norungi jebippom
karpulla kannihaiyaaga naamum
karththar varugaikkuk kaaththiruppom
Verse 7thavikkum ulagam andha naalil
thalaigalai uyarththi nadappom
varugai nerunga karththar yesu
vaasarpadiyil vandhu nirkiraar
Download Song