பிதாவே மெய் விவாகத்தைக்
கற்பித்துப் காத்து வந்தீர்
நீர் அதினால் மனிதரை
இணைத்து வாழ்வைத் தந்தீர்.
அதந்கெப்போதுங் கனமும்
மிகுந்த ஆசீர்வாதமும்
நீர்தாமே வரப்பண்ணும்.
Verse 2
நன்னாளிலுந் துன்னாளிலும்
ஒரே நெஞ்சை அளியும்
நீர் எங்கள் இருவரையும்
உம்மண்டை நடப்பியும்
கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை
நன்றாக வாய்க்கப் பண்ணும்.
Verse 3
அடியார் பார்க்கும் வேலையை
ஆசீர்வதித்து வாரும்.
நீர் உம்முடைய தயவை
அடியாரக்குக் காரும்.
முகத்தின் வேர்வையோடப்போ
சாப்பிடும் அப்பத்திற்கல்லோ
நீரே நல்ருசி ஈவீர்.
Verse 4
நீரே ஆசீர்வதித்கையில்
தடுக்கவே கூடாது.
அப்போதெண்ணெய்கலயத்தில்
குறைபட மாட்டாது.
குறைவை நிறைவாக்குவீர்.
நீர் பேசும் வார்த்தையால் தண்ணீர்
நல் ரசமாக மாறும்.
Verse 5
நீரே அனுப்புந் துன்பத்தைச்
சகிக்கச் செய்வோர் நீரே
இராத்திரியில் அழுகை
ஆனாலும் தேவரீரே
காலையில் மகிழ்வீய்கிறீர்
அனைத்தையும் நன்றாக்கினீர்
என்றும்மையே துதிய்போம்.
Verse 6
ஆ ஜீவ ஊற்றாம் இயேசுவே
நீங்காத ஜீவன் ஈவீர்
என் ஆத்துமத்தை நேசமே.
மணந்து ஏற்றுக் கொள்வீர்.
ஆ ஞான மணவாளனே
இங்கங்கும் அடியாருக்கே
குறைச்சல் ஒன்றும் இல்லை.