இயேசு: “பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார். லூக்கா 23:46
இப்போது நேச நாதா தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது
பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே.
Verse 2
சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்
நீர் தாங்கி மனதார மரித்தீர்;
உம் சாவில் பெலன் உற்றே ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.
Verse 3
நல் மீட்பரே சாவிருள் என்னைச் சூழ்ந்து
மரண அவஸ்தை உண்டாகையில்
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.
Verse 4
நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;
என் தலையை உம் மார்பில் அணைத்தே
என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்;
அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே