Verse 1பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!
Verse 2பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்;
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.
Verse 3அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே;
உருகும் அவர் நெஞ்சிலும்
நம் துன்பம் பாய்ந்ததே.
Verse 4முள் தைத்த சிரசில்
நம் பாவம் சுமந்தார்;
நாம் தூயோராகத் தம் நெஞ்சில்
நம் ஆக்கினை ஏற்றார்.
Verse 5எங்களை நேசித்தே
எங்களுக்காய் மாண்டீர்;
ஆ சர்வ பாவப் பலியே
எங்கள் சகாயர் நீர்.
Verse 6எத்துன்ப நாளுமே
மா நியாயத்தீர்ப்பிலும்
உம் புண்ணியம் தூய மீட்பரே
எங்கள் அடைக்கலம்.
Verse 7இன்னும் உம் கிரியையை
எங்களில் செய்திடும்;
நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கே
என் அன்பு ஈடாகும்.
Verse 1poorana vaazhkaiye!
deivaasanam vittu
thaam vandha nokkam yaavume
idho mudindhathu!
Verse 2pithaavin siththaththai
kothara mudiththaar;
thol vedha uraippadiye
kasthiyaich sagiththaar.
Verse 3avar padaath thukkam
nararkku illaiye;
urugum avar nenjilum
nam thunbam paainthathae.
Verse 4mul thaiththa sirasil
nam paavam sumandhaar;
naam thooyoraagath tham nenjil
nam aakkinaai etraar.
Verse 5engalai nesiththae
engalukkaai maandeer;
aa sarva paavap paliye
engal sagaayar neer.
Verse 6eththunba naalumae
maa niyaayath theerppilum
um punniyam thooya meetpare
engal adaikkalam.
Verse 7innum um kiriyaiai
engalil seidhidum;
neer anbaai eendha kirubaikkae
en anbu eedaagum.
Download Song