Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 போற்றும் போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும் வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும் போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.
Verse 2 போற்றும் போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலைத் திறந்தார்.
மா கர்த்தாவே ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
வாழ்க வாழ்க ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா மாசணுகா பரஞ்சோதி
வல்லநாதா கருணை நாயகா!
Verse 3 போற்றும் போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
போற்றும் போற்றும் மீட்பர் மகத்துவமாக
ஆட்சி செய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா மாட்சிமையோடு வந்து
இயேசு சுவாமி பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.
Verse 1 Potrum potrum! Punniya naadharaip potrum!
Vaanor koodi paadavum inbamaai
Paarileyum naama sangeerthanam seiyya;
Maandhar yaarum vaarum aanandhamaai.
Nesa meippan karathil yendhumaaru
Yesu naadhar nammaiyum thaanguvaar;
Potrum potrum! Deiva kumaaranaip potrum
Paadhukaathu nithamum poshippar.
Verse 2 Potrum potrum! Punniya naadharaip potrum!
Paavam pokkap paarinil jenmithaar;
Paadupattup piraanath thiyaagamum seidhu
Vaanaloka vaasalait thirandhaar.
Maa karththaave sthoththiram endrum endrum!
Vaazhga vaazhga jegaththu ratchagaa!
Arul naadhaa maasanugaa paranjothi
Vallanaadhaa karunai naayagaa!
Verse 3 Potrum potrum! Punniya naadharaip potrum!
Vinnum mannum isaindhu paadavum;
Potrum potrum meetpar magaththuvamaaga
Aatchi seivaar niththiya kaalamum;
Ega raajaa maatchimaiyodu vandhu
Yesu suvaami boomiyil aalumeyn;
Logam engum needhiyin sengolai ochchi
Jothiyaagap paalanam pannumeyn.
Share
Download Song
Cancel
Download