என் இயேசுவே நான் உம்முடையவன்
நீர் என் சொந்தம் என்றென்றுமாய்
ஆவி ஆத்மா சரீரம் பலியாய்
படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர்
Verse 3
தாயின் வயிற்றினில் பிரித்ததாம் நாள் முதல்
பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரே
வஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமே
பறித்திழுத்தெந்ன்னை உம் சொந்தமாக்கினீர் - என்
Verse 4
குயவனின் கையிலே களிமண்ணைப் போலவே
என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா
என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதா
உம் நோக்கம் என்னிலே ப+ரணமாகட்டும் - என்
Verse 5
நேசர் கரத்தினில் தீமை ஏதுமுண்டோ
யாதும் என் நன்மைக்கே என்பதை அறிகுவேன்
ஜுவாலிக்கும் அக்கினியோ பெருக்கான வெள்ளமோ
பட்சிக்க விட்டிடீர் அமிழ்த்தவும் பார்த்திடீர் - என்
மரண இருள் பள்ளம் தாண்டிடும் நேரத்தில்
இயேசு என் நேசரின் கரமதைக் காண்பதால்
மகிழ்வுடன் ஏகுவேன் அக்கரை யோர்தானில்
நித்தியம் நித்தியம் ஆனந்தம் கொள்ளுவேன் - என்