Pugalkindrom ummaya pugalgintom
Verse 1புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்தி மகிழ்கின்றோம் (2)
Verse 2நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
Verse 3கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்
ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்
ஆடை அணிந்து அமரச் செய்தீர்
ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர்
Verse 4பெதஸ்தா குளத்து முடவனையே
படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
இனியும் பாவம் செய்யாதே என்று
எச்சரித்தீரே தேடிச் சென்று
Verse 5தோல்வியில் துவண்ட பேதுருவின்
படகில் ஏறி போதித்தீரே
படகு நிறைய மீன்கள் தந்தீர்
பாவநிலையை உணர வாத்தீர்
Verse 6மரத்தில் அமர்ந்த சகேயுவை
மனகிரங்கி நோக்கினீரே
இறங்கி வாரும் என்று அழைத்து
இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
Verse 7பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
உம்மை போற்றி புகழச்செய்தீர்
Verse 8மரித்த லாசருவின் கல்லறை முன்
மனதுருகி நீர் கண்ணீர் விட்டீர்
நம்பினால் அதிசயம் என்று சொல்லி
நாற்றத்தை மாற்றி நடக்க வைத்தீர்
Verse 1Pugazhginrom ummaiyae pugazhginrom
Potri pugazhndhu paaduginrom
Uyarththugirom unnatharae uyarththi magizhginrom
Pugazhginrom punniyarae pugazhndhu paaduginrom
Ummaip pugazhndhu paaduginrom
Uyarththi magizhginrom (2)
Verse 2Nootruvat thalaivanai thaetrineerae
Vaarththaiyai anuppi vaazha vaitheer
Visuvaasam peridhendru paaraattineer
Vinnaga virundhil idam koduththeer
Verse 3Kallarai laegiyonai thaedi sendreer
Aaraayiram paeigazhai oda seidheer
Aadai anindhu amarach seidheer
Aarvamaai saatchi pagara seidheer
Verse 4Bedhasthaa kulaththu mudavanaiyae
Padukkai eduththu nadakkach seidheer
Iniyum paavam seiyaadhae endru
எச்சரித்தீரே thaedi sendru
Verse 5Tholviyil thuwanda paethuruvin
Padagil aeri bodhiththeerae
Padagu niraiya meengal thandheer
Paavanilaiyai unara vaaththeer
Verse 6Maraththil amarndha sagaeuvai
Managirangi nokkineerae
Irangi vaarum endru azhaiththu
Iratchippu thandhu magizha seidheer
Verse 7Parththimaeyu kurudanai paartheerae
Parisuththar ummaiyae paarkka vaitheer
Undhan pinnae nadakka vaitheer
Ummai potri pugazhachcheidheer
Verse 8Mariththa laasaruvin kallarai mun
Manadhurugi neer kanneer vitteer
Nambinaal adhisayam endru solli
Naatraththai maatri nadakka vaitheer
Download Song