இரத்தம் காயம் குத்தும்
நிறைந்து நிந்தைக்கே
முள் கிரீடத்தாலே சுற்றும்
சூடுண்ட சிரசே
முன் கன மேன்மை கொண்ட
நீ லச்சை காண்பானேன்?
ஐயோ வதைந்து நொந்த
உன் முன் பணிகிறேன்.
Verse 2
நீர் பட்ட வாதை யாவும்
என் பாவப் பாரமே;
இத்தீங்கும் நோவும் சாவும்
என் குற்றம் கர்த்தரே
இதோ நான் என்றுஞ் சாக
நேரஸ்தன் என்கிறேன்;
ஆனாலும் நீர் அன்பாக
என்னைக் கண்ணோக்குமேன்.
Verse 3
நீர் என்னை உமதாடாய்
அறியும் மேய்ப்பரே;
முன் ஜீவன் ஊறும் ஆறாய்
என் தாகம் தீர்த்தீரே;
நீர் என்னைப் போதிப்பிக்க
அமிர்தம் உண்டேனே;
நீர் தேற்றரவளிக்க
பேரின்பமாயிற்றே.
Verse 4
உம்மண்டை இங்கே நிற்பேன்
என்மேல் இரங்குமேன்;
விண்ணப்பத்தில் தரிப்பேன்
என் கர்த்தரை விடேன்;
இதோ நான் உம்மைப் பற்றி
கண்ணீர் விட்டண்டினேன்;
மரிக்கும் உம்மைக் கட்டி
அணைத்துக் கொள்ளுவேன்.
Verse 5
என் ஏழை மனதுக்கு
நீர் பாடுபட்டதே
மகா சந்தோஷத்துக்கு
பலிக்கும் மீட்பரே
என் ஜீவனே நான் கூடி
இச்சிலுவையிலே
உம்மோடென் கண்ணை மூடி
மரித்தால் நன்மையே.
Verse 6
நான் உம்மைத் தாழ்மையாக
வணங்கி நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காக
துதிப்பேன் இயேசுவே
நான் உம்மில் ஊன்றி நிற்க
சகாயராயிரும்;
நான் உம்மிலே மரிக்க
கடாட்சித்தருளும்.
Verse 7
என் மூச்சொடுங்கும் அந்த
கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த
ரூபாகக் காண்பியும்;
அப்போ நான் உம்மைப் பார்த்து
கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக்கொண்டு சாய்ந்து
தூங்குவேன் இயேசுவே.
Verse 1
Iraththam kaayam kuththum
nirainthu ninthaikkae
Mul kireedaththaalae suttrum
soodunda sirasae
Mun kana maenmai konda
nee lachchai kaanbaanaen?
Aiyo vathainthu nontha
un mun panigiraen.
Verse 2
Neer patta vaathai yaavum
en paavap paaramae;
Iththeengum novum saavum
en kutram karththarae
Itho naan endrum saaga
naerasthan engiraen;
Aanaalum neer anbaaga
ennaik kannnokkumaean.
Verse 3
Neer ennai umathaadaai
ariyum maeipparae;
Mun jeevan oorum aaraai
en thaagam theertheerae;
Neer ennaip pothippikka
amirtham undaenae;
Neer thaetraravalikka
paerinbamaayittrae.