சபையின் அஸ்திபாரம்
நல் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.
Verse 2
எத்தேசத்தார் சேர்ந்தாலும்
சபைஒன்றே ஒன்றாம்
ஒரே விஸ்வாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்;
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்;
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்.
Verse 3
புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்;
உள்ளானவரின் துரோகம்
கிலேசப்படுத்தும்;
பக்தர் ஓயாத சத்தம்
”எம்மட்டும்” என்பதாம்;
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்.
Verse 4
மேலான வான காட்சி
கண்டாசீர்வாதத்தை
பெற்று போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்.