Verse 1சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்
Verse 2திரு அவதாரா, நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
தரணியில் மனுடர்
உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர் நமஸ்காரம்
Verse 3பரிசுத்த ஆவி, நமஸ்காரம்
பரம சற்குருவே, நமஸ்காரம்
அரூபியாய் அடியார்
அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்
Verse 4முத்தொழிலோனே, நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்
Verse 1Sarva lokaathipaa, namaskaaram
Sarva srishtikane, namaskaaram
Tharai, kadal, uyir,
Vaan, sagalamum padaitha
Thayaapara pithaave, namaskaaram
Verse 2Thiru avathaaraa, namaskaaram
Jegath tiratchakane, namaskaaram
Tharaniyil manudhar
Uyir adainthongath
Tharuvinil maantor namaskaaram
Verse 3Parisuththa aavi, namaskaaram
Parama satguruve, namaskaaram
Aroopiyaai adiyaar
Agaththinil vasikkum
Ariyasiththe sadhaa namaskaaram
Verse 4Muththozhilone, namaskaaram
Moondrilondrone, namaskaaram
Karththaathi karththaa, karunaasamuththiraa,
Niththiya thiriyaekaa, namaskaaram
Download Song