Verse 1சீர் ஆவியால் இரக்கமாய்
உண்டான வேதமே
ஒப்பற்ற ஞானமுள்ளதாய்
நமக்குண்டாயிற்றே.
Verse 2அதில் பிறக்கும் போதனை
விளக்கைப்போலவே
நற்கதி சேரும் மார்க்கத்தை
விளக்கிக் காட்டுமே.
Verse 3இருள் நிறைந்த பூமியில்
அதே என் வெளிச்சம்
பரத்தை நோக்கிப் போகையில்
அதே நட்சத்திரம்.
Verse 4கர்த்தாவின் அருளால் அதே
மகா ஈவாயிற்று
அதைக்குறித்தென் நெஞ்சமே
சந்தோஷமாயிரு.
Verse 1seer aaviyaal irakkamai
undaana vaethamae
oppatra gnaanamullathaai
namakkundaayittrae.
Verse 2athil pirakkum boadhanai
vilakkaippoalavae
narkathi serum maarkkaththai
vilakkik kaattumae.
Verse 3irul niraindha boomiyil
adhae en velichcham
paraththai noekkip poagaiyil
adhae natchaththiram.
Verse 4karththaavin arulaal adhae
mahaa eevaayittru
adhaikkuriththen nenjamae
sandhoashamaayiru.
Download Song