Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
Verse 2 என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்
Verse 3 தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்
Verse 4 அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்
Verse 5 திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர்
Verse 1 Siluvai naadhar yesuvin
Peroli veesidum thooya kangal
Ennai nokki paarkkinrana
Tham kaayangalai paarkkinrana
Verse 2 En kaiyaal paavangal seidhittaal
Tham kaiyin kaayangal paarkkintraare
Theeya vazhiyil en kaalgal sendraal
Tham kaalin kaayangal paarkkintraare – siluvai naadhar
Verse 3 Theettulla ennam en idhayam kondal
Eetti paaindha nenjai nokkukintraar
Veenperumai ennil idampettraal
Mulmudi paarthida yengukintraar – siluvai naadhar
Verse 4 Avar raththam en paavam kazhuvidum
Avar kanneer ennai merugyetridum
Kalangarai vilakkaaga oli veesuven
Kalanguvorai avar mandhai serppen – siluvai naadhar
Verse 5 Thirundhidaa paavikkaai azhugintraar
Varundhidaa pillaikkaai kalangugintraar
Tham kanneer kaayaththil vizhundida
Kanneerum raththamum sindhugintraar – siluvai naadhar
Share
Download Song
Cancel
Download