சிலுவை சுமந்தோனாக
இயேசு உம்மைப் பற்றுவேன்
ஏழைப் பரதேசியாக
மோட்ச வீடு நாடுவேன்;
உற்றார் மேன்மை ஆஸ்தி கல்வி
ஞானம் லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி
வெறுப்பேனே முற்றிலும்.
Verse 2
உமக்காகப் பாடுபட்டோன்
நஷ்டப்படமாட்டானே;
உமக்கென்று ஜீவன் விட்டோன்
சாகா ஜீவன் பெற்றானே
உம்மை வெல்ல மீட்பர் என்று
சொல்லி நித்தம் பற்றுவேன்;
கஸ்திப்பட்டும் சாவை வென்று
வாடா கிரீடம் பெறுவேன்.
Verse 3
துஷ்டர் என்னைப் பகைத்தாலும்
நீரே தஞ்சம் ஆகுவீர்;
கஸ்தி என்ன நேரிட்டாலும்
இனி மேன்மை தருவீர்;
உமதன்பு என்னைத் தேற்ற
துக்கம் பயமில்லையே
நாதா உம் பிரசன்னம் நீங்க
இன்பமெல்லாம் துன்பமே.
Verse 4
நெஞ்சமே உன் மேன்மை எண்ணு
வரும் செல்வம் நோக்கிப்பார்
மோட்ச நன்மை தேடிக்கொள்ளு
உன் சுதந்தரத்தைக் கா;
கொஞ்ச வேளைக்குள் பறந்து
இயேசு அண்டை சேருவாய்;
தெய்வ தூதரோடு நின்று
என்றென்றைக்கும் துதிப்பாய்.