Siluvai Thaangu Meetbarpin
Verse 1சிலுவை தாங்கு மீட்பர் பின்
அவரின் சீஷனாகவே;
வெறுப்பாய் உன்னை லோகத்தை;
பின் செல்வாய் தாழ்மையாகவே.
Verse 2சிலுவை தாங்கு பாரத்தால்
கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்;
விண் பலம் உன்னைத் தாங்கிடும்
வல்லமை வீரம் பெறுவாய்.
Verse 3சிலுவை தாங்கு மேட்டிமை
கொள்ளாய் எந்நிலை எண்ணிடாய்;
நீ பாவம் சாவை மேற்கொள்ள
உன் மீட்பர் மாண்டார் ஈனமாய்.
Verse 4சிலுவை தாங்கி நின்றிடு
தீரமாய் மோசம் யாவிலும்;
சிலுவை சேர்க்கும் மோட்சத்தில்
சாவின்மேல் வெற்றி தந்திடும்.
Verse 5சிலுவை தாங்கி கிறிஸ்துவை
பின்செல்வாய் ஆயுள் முற்றுமே;
மகிமை கிரீடம் சூடுவாய்
சிலுவை தாங்கின்மட்டுமே.
Verse 6திரியேகரான மா கர்த்தா
என்றென்றும் போற்றப்படுவீர்;
மேலோக நித்திய வாழ்வுக்கே
அடியாரை நடத்துவீர்.
Verse 1siluvai thaangu meetpar pin
avarin seeshanaagavae;
veruppaai unnai logaththai;
pin selvaai thaazhmaiyaagavae.
Verse 2siluvai thaangu baaraththaal
kozhai nenjonai anjidaai;
vin balam unnaith thaangidum
vallamai veeram peruvaai.
Verse 3siluvai thaangu maettimai
kollaai ennilai ennidaai;
nee paavam saavai maerkolla
un meetpar maandaar eenamaai.
Verse 4siluvai thaangi nindridu
theeramaai mosam yaavilum;
siluvai saerkkum motchaththil
saavinmael vetti thanthidum.
Verse 5siluvai thaangi kristhuvai
pinselvaai aayul mutrumae;
magimai kireedam sooduvaai
siluvai thaanginmattumae.
Verse 6thiriyaekaraana maa karththaa
endrendrum potrappaduveer;
maeloga niththiya vaazhvukkae
adiyaarai nadaththuveer.
Download Song