Verse 1சிலுவைக் கொடி முன்செல்ல
செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;
தம் சாவால் ஜீவன் தந்தனர்.
Verse 2மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்
நல் வாலிபத்தில் மரித்தார்;
நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே
நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.
Verse 3முன்னுரை நிறைவேறிற்றே;
மன்னர்தம் கொடி ஏற்றுமே;
பலக்கும் அன்பின் வல்லமை
சிலுவை வேந்தர் ஆளுகை.
Verse 4வென்றிடும் அன்பின் மரமே!
வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!
உன் நிந்தை மாட்சி ஆயிற்றே
மன்னர் உம்மீது ஆண்டாரே.
Verse 5உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்
மன்னுயிர் சாபம் போக்கினர்;
ஒப்பற்ற செல்வம் தம்மையே
ஒப்பித்து மீட்டார் எம்மையே.
Verse 1Siluvaik kodi mun chella
Selvaar nam vendhar por seiyya;
Nam jeevan aanor maandanar;
Tham saavaal jeevan thanthanar.
Verse 2Mei saththiyam naattap paaduttraar
Nal vaalibaththil mariththaar;
Nam meetpar raththam peeritte
Nam nenjam thooimai aayitte.
Verse 3Munnurai niraivaeritte;
Mannar tham kodi aetrumae;
Balakkum anbin vallamai
Siluvai vendhar aalugai.
Verse 4Vendridum anbin maramae!
Vel vendhar sengol chinnamae!
Un nindhai maatchi aayitte
Mannar ummeedu aandaarae.
Verse 5Unnil or naalil aandavar
Mannuyir saabam pokkinar;
Oppatra selvam thammiyae
Oppiththu meettar emmiyae.
Download Song