Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே அதோ உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ உன் தாய் என்றார். யோவான் 19: 26 27
சிலுவையைப் பற்றி நின்று
துஞ்சும் மகனைக் கண்ணுற்று
விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;
தெய்வ மாதா மயங்கினார்;
சஞ்சலத்தால் கலங்கினார்;
பாய்ந்ததாத்துமாவில் வாள்.
Verse 2 பாக்கியவதி மாதா உற்றார்
சிலுவையை நோக்கிப் பார்த்தார்;
அந்தோ என்ன வேதனை!
ஏக புத்திரனிழந்து
துக்க சாகரத்தில் ஆழ்ந்து
சோகமுற்றனர் அன்னை.
Verse 3 இணையிலா இடருற்ற
அன்னை அருந்துயருற
யாவரும் உருகாரோ?
தெய்வ மைந்தன் தாயார் இந்த
துக்க பாத்திரம் அருந்த
மாதாவோடழார் யாரோ?
Verse 4 தம் குமாரன் காயப்பட
முள்ளால் கிரீடம் சூட்டப்பட
இந்த நிந்தை நோக்கினார்;
நீதியற்ற தீர்ப்புப்பெற
அன்பர் சீஷர் கைவிட்டோட
அவர் சாகவும் கண்டார்.
Verse 5 அன்பின் ஊற்றாம் இயேசு ஸ்வாமீ
உமதன்னைக்குள்ள பக்தி
எந்தன் நெஞ்சில் ஊற்றிடும்!
அன்பினால் என் உள்ளம் பொங்க
அனல் கொண்டகம் உருக
அருளைக் கடாட்சியும். ஆமென்.
Verse 1 Appozhuthu Yesu thammudaiya thaayaiyum arugae nindra thamakku anbaayirundha seeshanaiyum kandu thammudaiya thaayai nokki: sthireeye adho un magan endraar. Pinbu andha seeshanai nokki: adho un thaai endraar. Yovaan 19: 26 27
Siluvaiyaip patri nindru
thunjum maganaik kannutru
vimmip ponginaar eendraal;
deiva maathaa mayanginaar;
sanjalaththaal kalanginaar;
paainthathaaththumaavil vaal.
Verse 2 Baakkiyavathi maathaa utraar
siluvaiyai nokkip paarththaar;
antho enna vaedhanai!
Aega puththiran izhandhu
thukka saagaraththil aazhndhu
sogamutranar annai.
Verse 3 Inaiyilaa idarutra
annai arunthuyarura
yaavarum urugaaro?
Deiva maindhan thaayaar indha
thukka paaththiram aruntha
maathaavodazhaar yaaro?
Verse 4 Tham kumaaran kaayappada
mullaal kireedam soottappada
indha nindhai nokkinaar;
neethiyatra theerppuppera
anbar seeshar kaivittoda
avar saagavum kandaar.
Verse 5 Anbin ootraam Yesu swaamee
umathannaikkulla bakthi
endhan nenjil ootridum!
Anbinaal en ullam pongga
anal kondagam uruga
arulaik kadaatchiyum. Aamen.
Share
Download Song
Cancel
Download