சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் ஆ… ஆ….
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்
Verse 2
பாவ பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்ததென் ஜீவியமே ஆ…ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்;
ஏகுவேன் பறந்தே வேகம்
Verse 3
எவ்வித கொடிய இடறுக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் - ஆ…ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்