Verse 1ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்
Verse 2வான தூதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு
Verse 3இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம
Verse 4நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்
Verse 5இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே
Verse 6நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே
Verse 1sthoththiram yesu naathaa
umakkendrum sthoththiram yesu naathaa
sthoththiram seigirom ninnadiyaar
thiru naamaththin aatharavil
Verse 2vaana thoodhar senaigal
manohara geethangalaal eppothum
oyvintrip paadith thuthikkap perum
mannavanae umakku
Verse 3iththanai mahaththuvamulla
pathavi ivvezhaigal engalukku
eththanai maathayavu nin kirubai
eththanai aachchariyam
Verse 4nin uthiramathinaal
thirandha nin jeevap pudhu vazhiyaam
nin adiyaarkkup pithaavin sannithi
seravumae santhatham
Verse 5indraith thinamathilum
orumiththukkooda um naamaththinaal
thantha nin kirubaikkaai umakkendrum
sthoththiram, sthoththiramae
Verse 6neerallaal engalukkup
paralokil yaarundu jeevanaathaa
neereyandri igaththil veroru
thaettamillai paranae
Download Song